Post by Preethi Harsha .A
Show Producer | Researcher | Indian politics | Data analyst | Content Creator | Writer | Freelancer | Crafting My First Book 📘💙📈
ஒரு எழுத்தாளராக, எந்தவொரு தத்துவச் சாயலோ அல்லது கோட்பாட்டு முத்திரையோ இல்லாமல், மனித நேயத்தின் பக்கமிருந்தும், மரணத்தின் வலியிலிருந்தும் மட்டுமே இந்த ஆணவக்கொலை குறித்த எனது பார்வையை முன்வைக்கிறேன்: மனுஷனை மனுஷனாக மதிக்கத் தெரியாத எந்தவொரு கௌரவமும், பெருமையும் வெறும் குப்பைதான். ஒரு பெண்ணோ அல்லது ஒரு ஆணோ, தான் விரும்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அதைத் தடுப்பதற்கும், அவர்களின் உயிரைப் பறிப்பதற்கும் இங்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. மரணத்தை விட கொடியது, பெற்ற பிள்ளையின் மரணத்தைக் கொண்டாடும் இந்த போலியான சமூகக் கௌரவம்தான்! இதை ஒரு சித்தாந்தமாகப் பார்க்காமல், வெறும் 'மனித உரிமை'யாகப் பார்த்து, இந்த ஆணவக் கொலைகள் என்ற கொடூரம் நம் சமூகத்தில் இருந்து முற்றிலும் ஒழிய வேண்டும் என்பதே ஒரு எழுத்தாளராக எனது தார்மீகக் குரல்!⚜️ Writer Preethi Harsha . . #mayiladuthurai #JusticeForVictims #stopcyberbullying #RightToLove #HonourKilling #HumanityFirst #writingcommunity #fypシ゚ #writer #Linkedin