Post by Heymonth Ninja
M.A., B.Ed., PGDCM CTET NET(4) TNTET GATE
இந்த திரைப்படத்தை தோழி அபிநயா பரிந்துரை செய்தார். இது மிகவும் நகைச்சுவையான திரைப்படம். இது நாம் நினைக்கும் வாழ்க்கை நமக்கு கிடைக்கவில்லை என்றால், நமக்கு கிடைத்த வாழ்க்கையை நாம் இரசித்து வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும் திரைப்படம்.🎬🔥 ■ விக்டர் நவோர்ஸ்கீ (Victor Navorski) என்ற க்ரகோழியா (Krakozhia) நாட்டை சேர்ந்த நபர் தன் நாட்டில் மக்கள் புரட்சி வெடித்து மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரும்பாதிப்புக்கு உள்ளானதால் அமெரிக்கவிலிருந்து க்ரகோழியாவுக்கு செல்லும் விமான போக்குவரத்து சேவை பல மாதங்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், வேறுவழியின்றி அமெரிக்க விமானநிலைய அலுவலர்களால் ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலேயே (John F. Kennedy International Airport) இருக்கும்படி கடுமையான உத்தரவை பெறுகிறார். மொழி தெரியாத நாட்டில் மக்கள் விரும்பும்படி அவர் எப்படி தன்னை அங்கே தகவமைத்து (Adapt) கொள்கிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.👌🏻👌🏻 ■ இந்த திரைப்படத்தை பார்க்கும் போது "வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?" என்ற பாடல் தான் என் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிழைத்தலுக்கும் வாழ்தலுக்கும் இடையே ஒரு பாலமாக இத்திரைப்படம் இருக்கும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.❤️❤️ ■ திரைப்படத்தை பார்க்க: https://lnkd.in/gtsFbutH அவசியம் பாருங்கள், நண்பர்களே. #Terminal